06/08/2016
மலையகத்தின் தோட்டப்
பகுதிகளில் சீரான காலநிலை காரணமாக தேயிலை விளைச்சல் சிறப்பாக இருக்கிறது. விளையும்
கொழுந்தை சரியான பக்குவத்தில் கொய்து பதப்படுத்தி தரம் பிரித்தால் நமது தேயிலை
மீண்டுமுலகச் சந்தையில் முதலாம் இடத்தைப் பிடித்து விடும். அதேவேளையில் சந்தை விலையை நாம் நிர்ணயிக்கும் நிலைக்கு
உயர்ந்து விடுவோம்.
உலகச் சந்தையில் நமது
தேயிலையின் விலை அதிகரித்தால் நமது தோட்டத் தொழிலாளர்களின் தினக் கூலியை உயர்த்த
வேண்டும். தேயிலை உற்பத்தி அதிகரித்தால் தரத்துக்கு ஏற்ப விலையை அதிகரிக்க
முடியாது என்றெல்லாம் மூடத்தனமான காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு பெருந்தோட்ட
நிர்வாகங்கள் நமது மக்களுக்கு வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மாத்திரமே வேலை கொடுக்கின்றார்கள்.
அடுத்தவனுக்குக் கண்
குருடாக வேண்டும் என்ற நோக்கில் செயல் படும் பெருந்தோட்ட நிர்வாகங்களும்
அவர்களுக்கு உதவியாக மௌனியாக இருந்து வரும் சில தொழிற் சங்கங்களும் தங்களது
கண்களும் குருடாகிக் கொண்டிருப்பதைத் தெரிந்தும் தெரியாதது போல நாடகமாடிக்
கொண்டிருப்பது விந்தையே!
மலையகம் ஈட்டித் தரும்
லாபத்தைக் கருத்தில் கொண்டாவது அரசு உடனடியாக தொழிலாளர்களின் வேலை நாட்களில் கவனம்
செலுத்தி பாழாக்கும் தேயிலைக் கொழுந்து விளைச்சளைக் காப்பாற்ற வேண்டும்.