Popular Post

23/08/2016



நுவரேலியா பிரதேசசெயலக காரியாலயத்தில் 2016.08.23 இன்று அங்கு கடமை புரியும் ஊழியர்களுக்கு தொற்றாத  நோய்களுக்கான சுயவிபர மருத்துவ அறிக்கை  வழங்கப்பட்டது . சுகாதார அமைச்சின் செயல்திட்டத்தின் கீழ் நுவரேலியாமாவட்ட  MOH வைத்திய அதிகாரிகளின் உதவியுடன்  இந்நிகழ்வு இடம்பெற்றது . இதன்போது உடற் திணிவுச் சுட்டி (BMI), இரத்த அழுத்தம் , இரத்த சீனி அளவு  என்பன பரிசோதிக்கப்பட்டன. இதில் அபிவிருத்தி உத்தியாகஸ்தர்கள் , கிராம நிலதாரிகள் , திவிநெகும உத்தியோகஸ்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் . நிகழ்வின் போது தொற்றா நோய்களுக்கான  காரணம் அத்தகைய நோய்களின்  பாதிப்புகள் குறித்தான விளக்கங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது .  இதன் போது இத்தகைய பரிசோதனையினை சகலரும் இலவசமாக பெற்றுக்கொள்ளும் வகையில் மாவட்ட வைத்தியசாலைகளில் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சகலருக்கும் இந்த தகவலை பகிரும்படியாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 





Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

© Copyright © All rights reserved. Designed By SRN Web Design| Designer: Wajeehu Sarfan