- Back to Home »
- இலங்கை செய்திகள் »
- அரச நிதியை மோசடி செய்தாரா விமல்?
04/08/2016
அரச நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிக்க, முன்னாள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, இன்று பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த இவர், அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் மற்றும் எரிபொருட்களை உரிய முறைகளின்றி, தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், வீடமைப்பு அமைச்சராக இருந்த விமல் வீரவங்ச, அந்த அமைச்சுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அறைகளை தமது உறவினர்களுக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
1000 இலட்சம் ரூபா வரை இவரது இந்த செயற்பாடுகளால் அரசாங்கத்துக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அத தெரண தமிழ்)